Newsworld News International 0712 14 1071214052_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இ‌ந்‌திய, அமெ‌ரி‌க்க‌த் தூதரக‌ங்க‌ளி‌ன் ‌‌மீது த‌ற்கொலை‌த் தா‌க்குத‌ல்: பா‌க். உளவு ‌நிறுவன‌ம் எ‌ச்ச‌ரி‌க்கை!

Advertiesment
இ‌ந்‌திய அமெ‌ரி‌க்க‌ தூதரக‌ங்க‌ள் தற்கொலைத் தாக்குதல் பா‌கி‌ஸ்தா‌ன்
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் உ‌ள்ள இ‌ந்‌திய, அமெ‌ரி‌க்க‌த் தூதரக‌ங்கள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கு பய‌ங்கரவா‌திக‌ள் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளன‌ர் எ‌ன்று அ‌ந்நா‌ட்டு உள‌வு ‌நிறுவன‌ம் எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்து பா‌கி‌ஸ்தா‌ன் தே‌சிய அவசர கால மேலா‌ண்மை ‌நிறுவன‌ம் (எ‌ன்.‌சி.எ‌‌ம்.‌சி.) வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள ப‌‌ட்டிய‌லி‌ல், இ‌ந்‌திய‌த் தூதரக‌ம், அமெ‌ரி‌க்க தூதரக‌ம், ப‌ல்வேறு மத‌த் தலைவ‌ர்க‌ள், அர‌சிய‌ல் தலைவ‌ர்க‌ள் ஆ‌கியோ‌ரி‌ன் பெ‌ய‌ர்க‌ள் இட‌ம் பெ‌ற்று‌ள்ளன.

பா‌கி‌ஸ்தா‌ன் ஆ‌க்‌கிர‌மி‌ப்பு‌க் கா‌ஷ்‌மீ‌ர், ப‌ஞ்சா‌ப் உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு மு‌க்‌கிய‌ப் பகு‌திக‌ளி‌ல் நட‌த்த‌ப்படு‌ம் இ‌த்தா‌க்குதலு‌க்கு அ‌‌ல் க‌ய்டா பய‌ங்கரவாத இய‌க்க‌ம் காரணமாக இரு‌க்கலா‌ம் எ‌ன்று‌ம் அ‌‌‌ந்‌‌நிறுவன‌ம் தனது அ‌றி‌க்கை‌யி‌‌ல் கூ‌றியு‌ள்ளது.

"பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் ஆஃப்கான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஸ்வா‌த் பள்ளத்தாக்கு பகுதியில் மறை‌ந்‌திரு‌க்கு‌ம் பய‌ங்கரவாதிகள் இத்தகைய தற்கொலைப்படை தாக்குதலை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அதிபர் முஷாஃரப், அரசில் உயர் பதவி வகிப்பவர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மத விவகாரங்களுக்கான முன்னாள் அமைச்சர் இஜாஸல் ஹக் பெயரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் ராவல்பிண்டியில் உள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை மீதும் தாக்குதல் நட‌க்க‌க் கூடு‌ம்" எ‌ன்று‌அ‌ந்த அ‌றி‌க்கை‌யி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil