நேபாள ராணுவத் தளபதி ரூக்மான்குட் கடாவால் இன்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்தார்.
அரை மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பின் போது இருநாட்டு ராணுவ நல்லுறவுகள் பற்றியும், நேபாளத்தின் அரசியல், பாதுகாப்பு சூழல் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
முன்னதாக பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியைச் சந்தித்த ரூக்மான்குட், நேபாள எல்லையில் உள்ள பாதுகாப்புச் சிக்கல்கள் குறித்து விவாதித்தார்.
நேபாளத்தில் அமைந்துள்ள புதிய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த ஆண்டு தொடக்கத்தில் அந்நாட்டுக்கு வழங்கிவந்த ஆயுதங்களை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு சிக்கல்கள் குறித்து நடந்துள்ள விவாதம் முக்கியத்துவம் பெறுவதாக் கருதப்படுகிறது.