பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப்பை கொலை செய்ய நடந்த சதி திட்டத்தை, அந்நாட்டு உளவுத்துறையினர் முறியடித்துள்ளனர்.
இதுதொடர்பாக, கராய்ச்சி நகரில் சில அல்-காய்டா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இணையதள தகவல்கள் தெரிவிக்கின்றன.
"அடுத்தமுறை அதிபர் முஷாரஃப் கராச்சி வரும்போது விமான தளத்தில் இருந்து, சாரா-இ-பெய்சல் செல்லும் வழியில் உள்ள பாலத்தை முழுவதுமாக வெடிக்கச் செய்ய திட்டமிட்டிருந்தோம். ஒருவேளை அதில் முஷாரப் உயிர்பிழைத்தால், மேலும் இரண்டு திட்டங்களை தீட்டியிருந்தோம்" என்று பிடிபட்ட தீவிரவாதிகள் கூறியுள்ளனர்.
ஏற்கனவே, 3 முறை நடத்தப்பட்ட தாக்குதல்களில் முஷாஃப் தப்பித்துள்ள நிலையில், நான்காவது சதித்திட்டத்திலும் உயிர்பிழைத்துள்ளார்.