நாசாவின் அட்லாண்டிஸ் விண்வெளி ஓடம் டிசம்பர் 6ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இது தொடர்பாக சர்வதேச விண்வெளி நிலையத்தின் திட்டப்பணி அதிகாரி மைக் செப்ரிட்னி கூறுகையில், அட்லாண்டிஸ் விண்வெளி ஓடம் செல்வதற்கான அனைத்து பணிகளும் தற்போது இறுதி செய்யப்பட்டு வருகிறது. விண்வெளி பயணத்திற்கான ஆயத்தப் பணிகள் கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 6ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அட்லாண்டிஸ் புறப்படும் என்றார்.
நாசா நிறுவனம் விண்வெளியில் அமைத்து வரும் விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு தேவையான ஆய்வகப் பொருட்கள், உபகரணங்கள், விண்வெளி வீரர்களுக்கு தேவையான சாதனங்கள் இதில் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிகிறது.