Publish Date: Sun, 02 Dec 2007 (13:48 IST)
Updated Date: Sun, 02 Dec 2007 (13:47 IST)
''தேர்தல்களால் விரும்பத்தகாத நிலை ஏற்பட்டால் அதிபர் பதவியை ராஜினாமா செய்வேன்'' என்று முஷாரஃப் கூறியுள்ளார்.
அமெரிக்கா, மேற்கு இந்திய நாடுகளின் நிர்ப்பந்தம் காரணமாக ராணுவ தளபதி பதவியை ராஜினாமா செய்த முஷாரஃப் ஜனவரியில் தேர்தல் நடக்கும் என்றும் அறிவித்தார்.
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் முஷாரஃப், பாகிஸ்தானில் நிலவும் குழப்பங்களுக்கு அமெரிக்காவும் ஒரு காரணம். தேர்தலில் வன்முறை, தில்லுமுல்லு நடப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. கடந்த 5 ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் தன்னையும், பாகிஸ்தான் அரசையும் பலவீனப்படுத்த முயற்சித்து வருகின்றன. ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்திக்க தைரியம் இல்லாதவர்கள் தான் தேர்தலை புறக்கணிக்கிறார்கள்.
தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். தேர்தல்களால் விரும்பத்தகாத நிலை ஏற்பட்டால் பதவி விலகுவேன். பாகிஸ்தானையும், தீவிரவாரத்தையும், அல்கொய்தாவையும் ஒடுக்குவதால் ஏற்பட்ட தோல்விக்கு பாகிஸ்தான் மட்டும் காரணம் அல்ல. தீவிரவாதம் உலகம் முழுவதும் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலாக உலகில் தீவிரவாதத்துக்கு எதிராக போர் நடந்து வருகிறது என்று பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப் கூறியுள்ளார்.