பாகிஸ்தானில் ஜனவரி 8 ஆம் தேதி நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் கட்சியையும் ஆதரிக்க மாட்டேன் என்று அதிபர் முஷாரஃப் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் அதிபராக மீண்டும் பதவியேற்றுக் கொண்ட பர்வேஷ் முஷாரஃப்பை, ராபர்ட் பெனெட் தலைமையிலான 5 பேர் கொண்ட அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தது.
அப்போது, தேர்தலில் போட்டியிடும் எல்லா கட்சிகளும் சமமான மதிப்புடன் செயல்பட அனுமதிக்கப்படும். நான் எந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சியையும் ஆதரிக்க மாட்டேன் என்று முஷாரஃப் கூறினார்.
மேலும், வருகிற டிசம்பர் 16 ஆம் தேதி அவசர நிலை ரத்து செய்யப்படும் என்றும், பொதுத் தேர்தல் மிகவும் வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் நடத்தப்படும் என்றும் உறுதியளித்த முஷாரஃப், தேர்தலைக் கண்காணிப்பதற்கு சர்வதேசப் பார்வையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என்று கூறினார்.