சிறிலங்கா தலைநகர் கொழும்பில் நடந்த 2 தற்கொலைப் படைத் தாக்குதல்களையடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
நகரின் சில பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. முக்கியச் சாலைகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள பங்குச் சந்தைக் கட்டட வளாகத்திற்குள் வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் விக்கிரமரட்ண கூறியுள்ளார்.
கடந்த 1997 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள பங்குச் சந்தைக் கட்டடத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர், 100 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.