பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப்புக்கு எதிராக லாகூரில் நடந்த போராட்டத்தின்போது காவலர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
அதிபர் முஷாரஃப் மீண்டும் அதிபராகப் பதவியேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து லாகூரில் போராட்டம் நடத்தப் போவதாக வழக்கறிஞர்கள் அறிவித்திருந்தனர்.
இதன்படி இன்று காலை லாகூர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து 200 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஊர்வலமாகச் செல்ல முயன்றனர்.
அப்போது காவல்துறையினர் வைத்திருந்த தடுப்புகளை மீறியதால் வழக்கறிஞர்களுக்கும், காவலர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது.
''முஷாரஃப்பே போ போ'' என்பது போன்ற முழக்கங்களை எழுப்பியபடி வந்த வழக்கறிஞர்கள் காவலர்களின் மீது கற்களையும், பாட்டில்களையும் வீசினர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.