Publish Date: Wed, 28 Nov 2007 (19:59 IST)
Updated Date: Wed, 28 Nov 2007 (19:59 IST)
இலங்கைத் தலைநகர் கொழும்பு புறநகர்ப் பகுதியில் இன்று மாலை சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 16 பேர் பலியானதாகவும், 40 பேர் காயமுற்றதாகவும் செய்திகள் கூறுகின்றன.
கொழும்பு நகரில் இருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ள நுகெகொடா என்ற இடத்தில் உள்ள ஜவுளிக்கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததென காவல் துறையினர் கூறியுள்ளனர்.
வெடிகுண்டுகளுடன் வந்த பெண் ஒருத்தி தன்னை வெடிக்கச் செய்து நடத்திய தற்கொலைத் தாக்குதல் இதுவென்றும் கூறப்படுகிறது.
கொழும்பு நகரில் இன்று காலை சிறிலங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அலுவலகத்திற்கு வெளியே நடந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார். 3 பேர் காயமுற்றனர். ஒரே நாளில் இரண்டு இடங்களில் குண்டு வெடித்துள்ளது தலைநகர் கொழும்புவில் பலத்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.