பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் ராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகியதால் அமெரிக்கா தலைமையிலான பயங்கரவாத எதிர்ப்புப் போருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெவத் இக்பால் சீமா கூறுகையில், பயங்கரவாதத்தை அடியோடு அழிப்பது என்பது எங்களின் கொள்கை முடிவு. முஷாரஃப் பதவி விலகியதால் அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.
பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் இன்று நடந்த நிகழ்ச்சியில், தனது ராணுவத் தளபதி பதவியில் இருந்து விலகினார்.
அவருக்கு பதிலாகப் புதிய ராணுவத் தளபதியாக ஐ.எஸ்.ஐ. அமைப்பின் முன்னாள் தலைவர் ஆஷ்ஃபாக் கியானி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பலவும் வாழ்த்து தெரிவித்துள்ளன.