Publish Date: Tue, 27 Nov 2007 (18:56 IST)
Updated Date: Tue, 27 Nov 2007 (18:56 IST)
இலங்கையில் இன்று சிறிலங்க ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 11 சிறுமிகள் உள்பட 13 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் மேற்கில் உள்ள ஐயன்கேணியில் இத்தாக்குதல் நடந்துள்ளதாக இலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
''மாவீரர் நாளையொட்டி தங்களின் உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சிறுமிகளும் பொதுமக்களும் கொக்காவில்- துணுக்காய் வீதியில் இன்று காலை 11:30 மணிக்கு சென்று கொண்டிருந்தபோது அவர்களைக் குறி வைத்து சிறிலங்கா இராணுவத்தினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்'' என்று அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.