இந்தியாவில் அணுஉலை கட்டுமானப் பணிகளைத் தொடர்வதற்கு புதிய ஒப்பந்தங்களை உருவாக்கிக் கொள்ள ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு துணை பிரதமர் செர்கி இவானவ் கூறுகையில், கூடங்குளத்தில் தற்போது நடந்து வரும் அணுஉலைக் கட்டுமானப் பணிகளுடன் புதிய அணுஉலைகளை அமைப்பதற்கான ஒப்பந்தங்களையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.
முன்னதாக இந்தமாத தொடக்கத்தில் ரஷ்யா சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங், கூடங்குளத்தில் புதிதாக 4 அணுஉலைகளை அமைப்பதற்காக அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று கூறியிருந்தார்.
கடந்த ஜனவரி மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வந்த போது கூடங்குளம் திட்டத்திற்கான விருப்ப ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.