Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கட‌ல்களை க‌ண்கா‌ணி‌க்க ஒரு‌ங்‌கிணை‌ந்த ச‌ர்வதேச மைய‌ம்!

கட‌ல்களை க‌ண்கா‌ணி‌க்க ஒரு‌ங்‌கிணை‌ந்த ச‌ர்வதேச மைய‌ம்!

Webdunia

, திங்கள், 26 நவம்பர் 2007 (18:14 IST)
ச‌ர்வதேச கட‌ல் க‌ண்கா‌ணி‌ப்பு மைய‌த்தை அமை‌ப்பத‌ன் மூல‌ம் கட‌ல் வெப்பமடைவது, சுனா‌மி, அ‌திக ‌மீ‌ன் ‌பிடி‌த்தலா‌ல் ஏ‌ற்படு‌ம் ஆப‌த்து, மாசுபடு‌‌த்து‌ம் கார‌ணிக‌ள் ஆ‌கியவ‌ற்றை‌க் க‌ண்ட‌றிவது, தடு‌ப்பது உ‌ள்‌ளி‌ட்ட ப‌ணிகளை கட‌லி‌ல் மே‌ற்கொ‌ள்ள இயலு‌ம் எ‌ன்று ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

கட‌‌லி‌ல் ‌நிலவு‌ம் வெ‌ப்ப‌நிலை, ம‌ற்ற அ‌றிகு‌றிகளை உடனு‌க்குட‌ன் தெ‌ரி‌ந்து கொ‌ள்வத‌ன் முல‌ம் ம‌னித சமுதாய‌த்தை கா‌ப்பா‌ற்ற முடியு‌ம் எ‌ன்று ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் கூறு‌கி‌ன்றன‌ர்.

ச‌ர்வதேச கட‌ல் க‌ண்கா‌ணி‌ப்பு மைய‌த்தை அமை‌ப்பத‌ன் மூல‌ம் , கட‌லி‌ல் பெரு‌கிவரு‌ம் ‌ஆப‌த்தை குறை‌க்கவு‌ம், ம‌னித சமூக‌த்தை‌க் கா‌ப்பதுட‌ன், கட‌ல் செ‌ல்வ‌த்‌தி‌ன் வள‌த்தை‌க் க‌ண்கா‌ணி‌க்கவு‌ம் இயலு‌ம் எ‌ன்று அமெ‌ரி‌க்கா‌வி‌ன் க‌லிபோ‌‌ர்‌னீயா ப‌ல்கலை‌க் கழக‌த்‌தி‌ன் ‌ஸ்‌கி‌ரி‌ப்‌ஸ் கட‌லிய‌ல் மைய‌த்‌தி‌ன் இய‌க்குந‌ர் டோ‌னி ஹே‌ய்மெ‌ட் கூ‌றியு‌ள்ளா‌ர்.

பூ‌மி‌யி‌ல் வாழு‌ம் பெரு‌ம்பாலான உ‌யி‌‌ரின‌ங்க‌ள் ஏதாவது ஒரு வகை‌யி‌ல் கடலை ந‌ம்‌பி வா‌ழ்‌கி‌ன்றன. கட‌லி‌ன் வெ‌ப்ப‌நிலை மா‌றினா‌ல் அ‌தி‌ல் உ‌யி‌ர் வாழு‌ம் ‌மீ‌ன்க‌ள்,‌ சிறு உ‌யி‌ரின‌ங்க‌ளி‌ன் வா‌ழ்‌க்கை சூழ‌லி‌ல் மா‌ற்ற‌ங்க‌ள் உருவாகு‌ம். இதனா‌‌ல் உணவு‌ச் ச‌ங்‌கி‌லி பா‌தி‌க்க‌‌ப் படலா‌ம். கட‌ல்க‌ளி‌ல் ‌நிலவு‌ம் இய‌ற்கை சூ‌ழ்‌நிலையையு‌ம், அதனை மாசபடு‌த்து‌ம் கார‌ணிகளை க‌‌ண்ட‌றி‌ந்து தடு‌க்க உலக‌ம் முழுவதையு‌ம் ஒரு‌ங்‌கிணை‌த்து‌க் க‌ண்கா‌ணி‌க்க க‌ண்கா‌ணி‌ப்பு மைய‌ம் அவ‌சியமானது எ‌ன்று அவ‌ர் வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

கட‌லி‌ல் நட‌க்கு‌ம் ப‌ல்வேறு நடவடி‌க்கைக‌ளை ந‌ன்றாக தெ‌ரி‌ந்து கொ‌ள்வத‌ன் மூல‌ம் புயல், சூறாவ‌ளி, சுனா‌மி உ‌ள்‌ளி‌ட்டவைகளால் நம‌க்கு ஏ‌ற்படு‌ம் ஆப‌த்து‌க்க‌ளி‌ல் இரு‌ந்து ந‌ம்மை த‌ற்கா‌த்து‌க் கொ‌ள்ள இ‌ந்த மைய‌ம் உதவு‌ம் எ‌ன்று கூ‌றினா‌ர்.

கட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் மா‌ற்ற‌ங்களை‌த் து‌ல்‌லியமாக கண‌க்‌கிட முடிவத‌ன் மூல‌ம் குறை‌ந்த- ‌நீ‌ண்ட கால வா‌னிலை ‌‌விவர‌ங்க‌ள், த‌ட்பவெ‌ப்ப‌நிலை மு‌ன்ன‌றி‌வி‌ப்புக‌ள் ஆ‌கியவ‌ற்றை மு‌ன்கூ‌ட்டியே தெ‌ரி‌ந்து‌க் கொ‌ள்ளமுடியு‌ம். இதனா‌ல் பேர‌ழிவை எ‌தி‌ர்கொ‌ள்வது, வேளா‌ண் - ‌மீ‌ன்‌பிடி‌த்த‌ல் போ‌ன்றவ‌ற்‌றி‌ல் ‌தி‌ட்ட‌மிடுதலை மே‌ற்கொ‌ள்ளவு‌ம், அ‌ழிவை‌க் ம‌ட்டு‌ப்படு‌த்தவு‌ம் உதவு‌ம்.

உல‌கி‌ல் 90 ‌விழு‌க்காடு சர‌க்குக‌ள் கட‌ல் வ‌ழி‌ப்போ‌க்குவர‌த்து மூல‌ம் கையாள‌ப்படு‌கி‌ன்றன. இதுபோ‌ன்ற ஒரு மைய‌ம் அமை‌க்க‌ப்படு‌ம்போது கட‌லி‌ல் ‌நிலவு‌ம் சூ‌ழ்‌நிலை கு‌றி‌‌த்து து‌ல்‌லியமான தகவ‌ல்களை‌க் கூட ச‌ரியான தருண‌த்‌தி‌ல் தர இயலு‌ம் எ‌ன்று கூ‌றினா‌ர். இ‌ந்த ச‌ர்வதேச கட‌ல் க‌ண்கா‌ணி‌ப்பு மைய‌ம் 10 ஆ‌ண்டுகளு‌க்கு‌ள் க‌ட்டிமுடி‌க்க‌ப்பட வே‌ண்டு‌ம் என ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் ‌தி‌ட்ட‌பி‌ட்டு‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil