சிறிலங்காவில் செயல்பட்டுவரும் மனித உரிமைகள் ஆணையத்தை அதிபர் மகிந்த ராஜபக்ச நிர்வகிப்பதால் அதன் செயல்திறன் குறைந்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையர் லூய்ஸ் ஹார்பர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பி.பி.சி.செய்தி ஊடகத்திற்கு அளித்துள்ள நேர்காணலில், "சிறிலங்காவின் மனித உரிமைகள் ஆணையத்திற்கு சர்வதேச அங்கீகாரம் போதுமான அளவில் இல்லை. எனவே, இலங்கையில் ஒரு வலுவான அமைப்பாக சிறிலங்க மனித உரிமைகள் ஆணையம் செயல்பட முடியாது.
இதனால், இலங்கையில் ஐ.நா.வின் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை அமைக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்தேன். ஐ.நா. பார்வையாளர்களை சிறிலங்கா அனுமதிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.