சிறிலங்காவில் மோதல்கள் அதிகரித்துவருவதால் அங்கு செல்வதைத் தவிர்க்குமாறு தன் நாட்டு மக்களை ஆஸ்ட்ரேலியா அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்ட்ரேலியா அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் பணத்திற்காக வெளிநாட்டவர்கள் கடத்தப்படும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
''கடந்த 2ஆம் தேதி சிறிலங்க விமானப் படைநடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்செல்வன் கொல்லப்பட்டுள்ளார். இதற்குப் பதிலடி தரும் வகையில் விடுதலைப் புலிகள் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தக் கூடும். எனவே அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் பயங்கரவாத மோதல்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் சிறிலங்காவிற்குச் செல்வதைத் தவிர்க்குமாறு வேண்டுகிறோம்'' என்று அதில் கூறப்பட்டுள்ளது.