கடந்த 15 ஆண்டுகளில் முதன்முறையாக, பிளவுப்பட்ட கொரிய தீபகற்பத்தின் இரு நாடுகளான வட கொரிய, தென் கொரிய பிரதமர்கள் இருதரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பாக சந்தித்தது பேசினர்.
வடகொரிய பிரதமர் கிம்ஐங், தென் கொரிய பிரதமர் ஹன்டக்-சூ உடன் 3 நாட்கள் பேச்சு நடத்துகிறார். பொருளாதார திட்டங்களில் இணைந்து செயல்படுவது, கடல் எல்லை பிரச்சனை ஆகியவை இந்த சந்திப்பில் முக்கிய இடம் பெறும் என்று கூறப்படுகிறது.
பியாங்யாங்கில் கடந்த அக்டோபர் மாதம் இரண்டு நாட்டு அதிபர்களும் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து பிரதமர்களுக்கு இடையிலான இந்த சந்திப்பு நடைபெறுகிறது. கொரியா பிளவுப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் நடைபெறும் இரண்டாவது சந்திப்பு இதுவாகும்.
ஏற்கனவே வட கொரியாவின் கிம்ஐங்-இல்லும், தென் கொரியாவின் ரோமோ-ஹீயூனும் ஏற்கனவே சந்தித்து பேசியுள்ளனர். தொழில்நுட்பத் துறையில் இருநாடுகளிடையே போட்டி தொடரும் நிலையிலும் பொருளாதார ஒத்துழைப்பு,அமைதியான சூழ்நிலையை உருவாக்குவது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது இருநாட்டு பிரதமர்களும் முக்கியப் பிரச்சனைகள் குறித்த விவாதிக்க உள்ளனர்.
கடந்த காலங்களில் அதிக பிரச்சனைகள் உருவான மேற்கு கடல் பகுதியில் இருநாட்டு மீனவர்களும் மீன் பிடிக்க ஏதுவாக இருநாடுகளும் இணைந்து, பொதுவான மீன்பிடி பகுதியை உருவாக்குவது, வட கொரிய துறைமுகமான ஹாஜீ அருகே புதிய பொருளாதார மண்டலத்தை அமைப்பது ஆகியன முக்கியமாக விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதுதவிர எல்லை நகரமான கேசாங்கில் கூட்டுத் தொழில் மண்டலங்களை உருவாக்கி நிர்வகிப்பது, பிளவுப்பட்ட போது பிரிந்த குடும்பங்கள் ஓன்று சேருவது தொடர்பான சந்திப்புகளை அதிகரிப்பது ஆகியன பற்றியும் பேசுவார்கள் என்று தெரிகிறது,
இந்த சந்திப்பிற்கு முன்னர் பேசிய கிம், இச்சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். இந்த பேச்சு வெற்றிகரமாக அமையும் என்று தான் நம்புவதாக கூறினார்.
அணுசக்தி தொடர்பான பியாங்யாங்கின் இலக்கு கடந்த 1992 முதல் இருகொரிய நாடுகளின்பிரதமர் அளவிலான சந்திப்புக்கு தடையாக அமைந்துவிட்டது.
நிவாரணத்தைப் பெறவேண்டும் என்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் வட கொரியா தனது அணுகக்தி திட்டத்தை கைவிட ஒத்துக் கொண்டது, மேலும் தனது பிரதான அணு உலையான யாங்பையானை சிதைக்கும் பணியில் களம் இறங்கியுள்ளது. இந்த சந்திப்பு இரண்டு கொரியா இடையே சுமுக உறவை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் நடைப்பெற்ற தென்கொரிய அதிபர் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்தலீ மீயுங்-பக் வெற்றி பெற்றார்.அவர் அப்போது வட கொரியாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1910 -ம் ஆண்டு ஐப்பானின் காலணி ஆதிக்கத்தின் கீழ் கொரியா இருந்துவந்தது. அமெரிக்க பின்னணி கொண்ட தென் கொரியா என்றும், சோவியத் பின்னணி கொண்ட வட கொரியா என்றும் கடந்த 1945 -ம் ஆண்டு பிளவுப்பட்டுப் போனது.
இதனைத் தொடர்ந்து 1950-53-க்கு இடைப்பட்ட போரினால் எந்தவித அமைதி ஒப்பந்தமும் ஏற்படவில்லை. அதேப் போன்று 1987-ம் ஆண்டு தென் கொரிய விமானத்தின் மீது வடகொரியா நடத்திய தாக்குதலில் 115 பேர் கொல்லப் பட்டனர். தென் கொரியா கடந்த 1990 -ம் ஆண்டு கான்சிலேட்டரி சன்சைன் திட்டத்தை அறிமுகப் படுத்தியது.
இந்நிலையில் 2000-ம் ஆண்டில் கிம்ஐங்-இல்லும், கிம்டே-ஐங்கும் முதன்முறையாக சந்தித்துப் பேசினர். அதனைத் தொடர்ந்து தற்போதுகிம்ஐங்-இல்லும், ரோக் மோ-ஹையூனும் இரண்டாவது முறையாக சந்தித்துப் பேசுகின்றனர்.