Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'என்னைப் பதவிவிலகச் சொல்ல பெனாசிருக்கு உரிமையில்லை': முஷாரஃப் பதிலடி!

'என்னைப் பதவிவிலகச் சொல்ல பெனாசிருக்கு உரிமையில்லை': முஷாரஃப்  பதிலடி!

Webdunia

, புதன், 14 நவம்பர் 2007 (13:30 IST)
'அதிபர் பதவியிலிருந்தோ அல்லது ராணுவத் தளபதி பதவியிலிருந்தோ என்னை விலகச் சொல்வதற்கு பெனாசிர் புட்டோவிற்கு உரிமையில்லை' என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அதிபர் என்ற பதவியில் இருந்து முஷாரஃப் உடனடியாக விலக வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள முஷாரஃப், ''பெனாசிர் ஒருவேளை பாகிஸ்தானுடன் தனக்குள்ள உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளும் எண்ணத்தில் வந்திருந்தால் நிலைத்து நிற்க முடியும். ஆனால் அவர் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறார். எனவே இது எதிர்விளைவுகளை உருவாக்கும் என்று நான் பயப்படுகிறேன்'' கூறியுள்ளார்.

பெனாசிரை வீட்டுச்சிறையில் வைத்தற்குபெனாசிர்தான் காரணம். பஞ்சாப் முதல்வர் செளத்ரி பர்வேஷ் எலாஹி தனக்கெதிராகச் சதி செய்கிறார் என்று பெனாசிர் தெரிவித்தார். எனவே அவரைப் பாதுகாப்பதற்காகவே வீட்டுச் சிறையில் வைத்தோம். இல்லையென்றால் அரசை அவர் குற்றம்சாற்றுவார் எனறார் முஷாரஃப்.

Share this Story:

Follow Webdunia tamil