Publish Date: Fri, 09 Nov 2007 (15:58 IST)
Updated Date: Fri, 09 Nov 2007 (15:58 IST)
துபாயில் பாலம் கட்டுமானப் பணியின் போது திடீரென்று அந்தப் பாலம் இடிந்து விழுந்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர். 24க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்!
துபாய் அருகே துபாய் மெரீனா என்ற புதிய நகரம் நவீனமயமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்குள்ள சஃபோசாலையில் பாலம் ஒன்று கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் 40 பேரும் இந்தியர்கள். நேற்று மாலை அந்தப் பாலத்தின் சில பகுதிகள் திடீரென்று விழுந்து நொறுங்கியதால் 7 பேர் சம்பவ இடத்திலேயே நசுங்கி பலியானார்கள். இந்த போர விபத்தில் படுகாயமடைந்த 24 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த இந்திய தூதரக அதிகாரிகள், சம்பவ இடத்தையும் பார்வையிட்டனர்.
விரைவில் முழு விவரத்துடன்...