சிறிலங்கா அரசின் நிதிநிலை அறிக்கையில் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புச் செலவினங்களுக்கு 166.4 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 20 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சிறிலங்க நாடாளுமன்றக் கூட்டத்தில் நிதியமைச்சரும், அதிபருமான மகிந்த ராஜபக்ச தனது அரசின் மூன்றாவது நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார்.
வருகின்ற 2008-ஆம் ஆட்டிற்கான இந்த நிதிநிலை அறிக்கையில் பாதுகாப்புச் செலவினங்களுக்கு 166.4 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் 139 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. அதைவிட இப்போது ஒதுக்கப்பட்டுள்ள தொகை சுமார் 20 விழுக்காடு அதிகமாகும்.
அடுத்த ஆண்டு அரசின் மொத்த வருமானம் 750.74 பில்லியன் ரூபாயாகவும் மொத்த செலவினம் 1,044.18 பில்லியன் ரூபாயாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பற்றாக்குறை தொகை 293.44 பில்லியன் ரூபாயாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.