Publish Date: Wed, 07 Nov 2007 (18:18 IST)
Updated Date: Wed, 07 Nov 2007 (18:18 IST)
இலங்கை அனுராதபுரம் விமானப் படைதளத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 26 விமானங்கள் சேதமடைந்துள்ளன என்று அந்நாட்டுக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரம் விமானப் படைதளத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட நீதிபதியின் முன்னிலையில் முதல்கட்டமாக தாக்கல் செய்த அறிக்கையில் 10 விமானங்களே சேதமடைந்தன என்று காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். தற்போது மேலும் 16 விமானங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
விமானப் படைதளத்தின் அருகிலிருந்த கட்டடம் மற்றும் வேறுபல சொத்துகளும் சேதமடைந்துள்ளன, முழு விசாரணைக்குப் பிறகுதான் முழுமையான விவரங்கள் தெரியவரும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.