Publish Date: Mon, 05 Nov 2007 (19:20 IST)
Updated Date: Mon, 05 Nov 2007 (19:20 IST)
''இலங்கையில் விடுதலைப்புலிகளின் முக்கிய நிலைகளின் மீதான தாக்குதல் தொடரும்'' என்று சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் சிறிலங்க விமானப்படை நடத்திய தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தங்கள் இயக்கத்தின் லட்சிய பயணம் தொடரும் என்று கூறியுள்ளார்.
இதனிடையே சிறிலங்கா பிரதமர் ரத்தனசிரி விக்கிரமநாயக நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், புலிகள் மீதான குண்டுவீச்சு தாக்குதல் தொடரும் என்று கூறியுள்ளார்.
இலங்கையில் அமைதியை ஏற்படுத்த விடுதலைப் புலிகளின் முக்கிய நிலைகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Webdunia
Publish Date: Mon, 05 Nov 2007 (19:20 IST)
Updated Date: Mon, 05 Nov 2007 (19:20 IST)