Publish Date: Sat, 03 Nov 2007 (18:26 IST)
Updated Date: Sat, 03 Nov 2007 (18:26 IST)
தங்களின் அரசியல் தலைவர் சு.ப. தமிழ்செல்வனின் இழப்பிற்கான பதிலடியை வார்த்தைகளால் அல்ல, செயல்களினால் கொடுப்போம் என்று விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
பி.பி.சி. செய்தி ஊடகத்திடம் பேசிய விடுதலைப் புலிகளின் ராணுவ பேச்சாளர் ராசையா இளந்திரையன், ''போராளிகளின் இழப்பிற்கான பதிலடியை வார்த்தைகளால் அல்ல செயல்களில் காட்டுவோம், அது சிங்கள அரசிற்கு வியப்பளிப்பதாக அமையும்'' என்று தெரிவித்துள்ளார்.
சிங்கள ராணுவம் நடத்திய தாக்குதலில் பலியான அரசியல் தலைவர் தமிழ்செல்வனுக்கு, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் அஞ்சலி செலுத்திய சிறிது நேரத்தில் புலிகளின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.