சிறுமிகளைக் கற்பழித்த புகார் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அமைதிப் படையில் பணியாற்றிய 108 சிறிலங்கா ராணுவத்தினரை ஐ.நா. திருப்பி அனுப்பியுள்ளது.
பின்தங்கிய நாடான ஹெய்ட்டியில், ஐ.நா அமைதிப் படையின் கீழ் பணியாற்றி வரும் 950 சிறிலங்கா ராணுவத்தினரில் 108 பேர் சிறுமிகளைக் கற்பழித்த புகார் நிரூபிக்கப்பட்டது.
இதனடிப்படையில் அவர்களை ஐ.நா. சிறிலங்காவிற்குத் திருப்பி அனுப்பியுள்ளது.
ராணுவத்தினர் மீது நிரூபிக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையும் சிறிலங்கா அரசும் மிகுந்த கவலையடைந்துள்ளது என்று ஐ.நா செய்தித் தொடர்பாளர் மைக்கேல் மொண்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா படையினர், வயது குறைந்த சிறுமிகளுக்கு பணம் கொடுத்து இக்கொடூர செயலை செய்துள்ளனர். இதில் தொடர்புடைய 108 சிறிலங்கா படையினர் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்று சிறிலங்கா தெரிவித்துள்ளது சிறிலங்காப் படையினரால் பாதிக்கப்பட்டோருக்கு ஐ.நா. உதவும் என்றும் மைக்கேல் தெரிவித்தார்.