தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறி சிறிலங்க அரசிற்கு ஆதரவான துணை ராணுவக் குழுவை நடத்தி வந்த கருணா லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்!
போலி கடவுச் சீட்டு வைத்திருந்ததாக கருணா கைது செய்யப்பட்டுள்ளார் என இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
போலி கடவுச் சீட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கருணா விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம் என்று செய்திகள் கூறுகின்றன.