இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அச்சுறுத்தலாய் இருப்பதைவிட பாகிஸ்தானுக்கு அதிக ஆபத்தானவராக அதிபர் முஷாரஃப் உள்ளார் என்று அந்நாட்டின் முக்கிய எதிர்கட்சிகளில் ஒன்றான முட்டாஹிடா மஜ்லிஸ் இ அமால் கட்சியின் தலைவர் காசி ஹூசைன் குற்றம்சாற்றியுள்ளார்.
குண்டுவெடிப்புகளின் காரணமாக ஜனநாயக இயக்கங்களின் மீது ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாட்டில் சர்வாதிகாரம் தலைதூக்கி உள்ளது.
பாகிஸ்தானில் ஜனநாயக ரீதியான அரசு அமைய வெளிப்படையான பொதுத்தேர்தல் நடைபெற வேண்டியது அவசியம். ஆனால் முஷாரஃப்பும், தற்போதைய தேர்தல் ஆணையரும் பதவியில் இருக்கும் வரை அது நடக்காது.
ஸ்வாத், வசிரிஸ்தான் போன்ற பகுதிகளில் முஷாரஃப்பின் ராணுவம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசின் தவறான கொள்கைகள் காரணமாக மக்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தக் கொள்கைகள் தொடருமானால் ஒரு உள்நாட்டுப் போர் நிச்சயம் உருவாகும் என்றும் காசி கூறினார்.