பாகிஸ்தானில் விமானப் படையினர் பயணம் செய்த பேருந்தின் மீது தற்கொலைப் படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர்.
பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ஸ்வாத் பகுதியில் பதுங்கியிருக்கும் தாலிபான் ஆதரவுத் பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
அதற்குப் பலிவாங்கும் வகையில் தற்கொலைப் படை பயங்கரவாதிகள் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
வடகிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் விமானப் படையினர் வந்த பேருந்தின் மீது பைக்கில் வந்த தற்கொலைப் படை பயங்கரவாதி தாக்குதல் நடத்தினான்.
சர்கோதா மாவட்டத்தில் நடந்த இத்தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். 3 பள்ளிக் குழந்தைகள் உள்பட 40 பேர் படுகாயமடைந்தனர்.
கடந்த மூன்று நாட்களில் ராணுவத்தினர் மீது நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
முன்னதாக ராவல்பிண்டியில் ராணுவத் தலைமையகம் அருகில் நடந்த தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.