பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மனித வெடிகுண்டுகள் ஊடுருவியிருக்கலாம் என்று வந்துள்ள தகவலின் அடிப்படையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தாலிபான்களின் ஆதிக்கம் நிலவும் வசிரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.
எனவே அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையில் கடந்த சில நாட்களாக மோதல் நடந்து வருகிறது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பெரிய தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இஸ்லாமாபாத்திற்குள் இரண்டு அல்லது மூன்று மனித வெடிகுண்டுகள் ஊடுருவியிருக்கலாம் என்று அந்நாட்டு உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கியச் சாலைகள் மூடப்பட்டுள்ளன. பேருந்துகள், ரயில்களில் திடீர் சோதனைகள் நடத்தப்படுகின்றன.