Publish Date: Mon, 29 Oct 2007 (17:08 IST)
Updated Date: Mon, 29 Oct 2007 (17:08 IST)
இலங்கையில் இன்று சிறிலங்க விமானப்படை விமானங்கள் நடத்திய தாக்குதலில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று காலை 10 மணியளவில் சிறிலங்கா விமானப் படையைச் சேர்ந்த 2 கிஃபீர் வகை விமானங்கள் பறந்து குண்டுகளை வீசின.
புதுக்குடியிருப்பு கோம்பாவில் என்ற பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் குடியுருப்புகள் மீது குண்டுகள் விழுந்தன. இதில் யோகராஜா (42), சாந்தகுமாரி(42) ஆகிய இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
இத்தாக்குதலில் சில வீடுகளும் சேதமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அங்குள்ள பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் விமானத் தாக்குதலால் பதற்றமடைந்து தெருவுக்கு ஓடினர்.
Webdunia
Publish Date: Mon, 29 Oct 2007 (17:08 IST)
Updated Date: Mon, 29 Oct 2007 (17:08 IST)