இலங்கையின் தென்பகுதியில் புலிகளின் நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருகின்றனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு சிறிலங்காவின் தெற்குப் பகுதியில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
யால சரணாலயப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் , திஸ்ஸமகாராமவில் கடற்படையினர் சென்ற பேருந்து ஆகிவற்றின் மீது புலிகள் தாக்குதல்தகளை நடத்தினர்.
இதில் திஸ்ஸமகாராம பகுதி அதிபர் மகிந்த ராஜபக்சவின் தொகுதிக்குள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அங்குள்ள ராணுவத்திற்குமிகப்பெரிய தலைவலி உருவாகியுள்ளது. அரசியல் சூழ்நிலையிலும் குழப்பங்கள் ஏற்பட்டுளளன.
எனவே தெற்குப் பகுதியில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த சிறிலங்கா அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். அண்மையில் சுமார் 3,000 வீரர்கள் அங்கு சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 3,000 வீரர்களைக் குவிக்கவும் ராணுவம் திட்டமிட்டுள்ளது.