ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவத்துடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 80 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் தாலிபான் தீவிரவாதிகளுக்கும் அமெரிக்கப்படைகளுக்கும் இடையே அவ்வப்போது துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.
நேற்று ஹெல்மாண்ட் மாகாணத்தில் உள்ள முசா காலா என்ற இடத்தில் பல மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 80 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தப் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் நடைபெற்ற மிகப்பெரிய மோதலில் 5வது சம்பவம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை தாலிபான் தீவிரவாதிகள் அமெரிக்க கூட்டுப் படையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ராக்கெட் வீச்சுகளும் அடங்கும் என்றும் கூறிய அமெரிக்க படையினர், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தப் பகுதியில் இதுவரை சுமார் 250 தாலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.