பெனாசீரைக் கொல்ல தற்கொலைப் படையைச் சேர்ந்த பெண் தீவிரவாதிகள் குறிவைத்துள்ளனர் என்று அவரின் நெருங்கிய உறவினர் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் புட்டோ நாடு திரும்பிய நாள் முதல் அவருக்கு அச்சுறுத்தல் இருந்து வருகிறது.
கராச்சியில் நடைபெற்ற தாக்குதலில் பெனாசீர் உயிர் தப்பினார். ஆனால் அவரின் கட்சித் தொண்டர்கள் 165 பேர் பலியானார்கள். அடுத்த நாள் நடந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் பெனாசீருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது என்று, அவரின் உறவினரும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான ஃபரூக் நாய்க் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளின் தற்கொலைப் படையில் உள்ள பெண்கள் குழுவின் தலைவர் அக்கடிதத்தை எழுதியுள்ளார் என்றும் அவர் கூறினார்.
மேலும், அந்த கடிதத்தை எழுதிய பயங்கரவாத இயக்கம், அல் காய்டா இயக்கத்தின் துணை இயக்கமாக இருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.