Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லூசியானா ஆளுநராகும் இந்தியர்

லூசியானா ஆளுநராகும் இந்தியர்

Webdunia

, ஞாயிறு, 21 அக்டோபர் 2007 (15:01 IST)
அமெரிக்க வாழ் இந்தியரான பாபி ஜிந்தால் லூசியானா மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் மிகப் பெரிய பொறுப்பு வகிக்கும் முதல் இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கடந்த 130 ஆண்டுகளில் அமெரிக்கர் அல்லாத ஒருவர் இதுபோன்று ஒரு முக்கியப் பொறுப்பில் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பதும் பெருமைப்பட வேண்டிய விஷயம்.

36 வயதான பாபி ஜிந்தால் வரும் ஜனவரி மாதம் தனது பதவியில் அமருவார்.

ஆளுநருக்கான தேர்தலில் மிக முக்கியமான 3 வேட்பாளர்களை 53 வாக்குகள் பெற்று வீழ்த்தினார் ஜிந்தால்.

அமெரிக்காவின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளவர் ஜிந்தால். லூசியானாவில் தற்போது நிலவும் வறுமை, கல்லாமை, சுகாதார சீர்கேடு ஆகியவற்றை சரி செய்யும் மிக முக்கியப் பொறுப்புகள் ஜிந்தாலை எதிர்நோக்கியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil