Publish Date: Sun, 21 Oct 2007 (13:06 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:32 IST)
துபாய் க்ரீக்கின் டெய்ரா என்ற பகுதியில் கட்டடம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த இரண்டு இந்திய தொழிலாளர்கள் மீது கட்டடம் இடிந்து விழுந்ததில் இருவரும் நசுங்கி உயிரிழந்தனர்.
ராம் பாபு மற்றும் வெங்கட் ராவ் என்ற இந்த இருவரும் கட்டப் பணியாளர்களாக துபாய் சென்றுள்ளனர். இவர்கள் டெய்ரா என்ற பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று திடீரென கட்டடத்தின் மேல் தளம் சரிந்து கீழே விழுந்தது. அப்போது கீழே பணியாற்றிக் கொண்டிருந்த இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
உயிரிழந்த இரு தொழிலாளர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த இரு தொழிலாளர்களும் இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்களாவர்.