சிறிலங்காவில் சிறுவர்கள் காணாமல் போவது தொடர்கிறது என்று அந்நாட்டு சிறுவர் பாதுகாப்பு அவையின் அதிகாரி ஜகத் வெள்ளவத்த கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,'' கடந்த 9 மாதங்களில் 247 சிறுவர்களைக் காணவில்லை என்று அவர்களின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 70 சிறுவர்கள் மாயமாகி உள்ளனர். அதில் 11 பேர் கொழும்பு நகரைச் சேர்ந்தவர்கள்.
உண்மையில் காணாமல்போன சிறுவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். கடந்த 4 மாதங்களில் 4 சிறுவர்களை மட்டுமே கண்டுபிடித்து உள்ளோம்'' என்றார்.