Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடும் போர் மூளப்போகிறது : விடுதலைப் புலிகள்!

கடும் போர் மூளப்போகிறது : விடுதலைப் புலிகள்!

Webdunia

, வெள்ளி, 12 அக்டோபர் 2007 (19:09 IST)
சிறிலங்க ராணுவத்துடன் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் கடும் போருக்கான காலம் வந்துவிட்டது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் கூறியுள்ளார்!

யாழ்ப்பாணத்தில் நடந்த நினைவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய புலித்தேவன், "இனி வரப்போகும் காலமே எமக்குச் சாத்தியமான காலம். இந்தக் காலத்தை நாங்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும். எனவே, இனிவரும் காலத்தில் கடும் சமர் மூளப்போகின்றது. இனி சமாதானப் பேச்சுகள் நடைபெற வாய்ப்பில்லை" என்று கூறியுள்ளார்.

புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற பகுதிகளையும் மீட்போம் என்று பசில் ராஜபக்சே கூறியுள்ளதை சுட்டிக்காட்டிய புலித்தேவன், அதற்கெல்லாம் சரியாக பதில்கள் உள்ளதென்றும், அனைத்து கள முனைகளிலும் கடும் போரை ஆரம்பிக்க எதிரி தயாரிகிவிட்ட நிலையில், அதற்கான பதிலடிகளை வழங்க நாமும் தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளார்.

"அண்மைக்காலமாக மன்னார் பகுதியில் கடும் தாக்குதல்களை நடத்தினோம். அதன்மூலம் எதிரியின் உடல்களையும், ஆயுதங்களையும் கைப்பற்றினோம். இவ்வாறுதான் இனி நடக்கப் போகின்ற போர்களும் உக்கிரமானவையாக இருக்கும். சில சிறிய நிலப்பகுதிகளை ஆக்கிரமித்துவிட்டு அதைப் பெரும் வெற்றியாகக் காட்டிக்கொண்டு சிங்கள மக்களையும், சர்வதேசத்தையும் மகிந்த அரசு ஏமாற்றி வருகிறது" என்று புலித்தேவன் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil