சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
புது டெல்லியில் ஆங்கில நாளிதழ் ஏற்பாடு செய்துள்ள மாநாட்டில் நாளை அவர் உரையாற்றுகிறார்.
பின்னர் பிரதமர் மன்மோகன்சிங் உள்படப் பல்வேறு தலைவர்களையும் மகிந்த ராஜபக்ச சந்தித்திக்கிறார். அப்போது சிறிலங்கா இனச்சிக்கல் குறித்து விரிவாக விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இதற்கிடையில், ஃபுளோரிடா மாகாண முன்னாள் ஆளுநர் ஜெப் புஷ், கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் பருவநிலை, வானியல் ஆய்வு மையத்தின் பேராசிரியர் வி.ராமநாதன், ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தின் சுற்றுச் சூழல் மையத்தின் பேராசிரியர் டேனியல் ஸ்ரேக் ஆகியாரும் நாளை ஆங்கில இதழின் மாநாட்டில் உரையாற்றுகின்றனர்.