Publish Date: Thu, 11 Oct 2007 (19:47 IST)
Updated Date: Thu, 11 Oct 2007 (19:47 IST)
இனப் பிரச்சினைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் இராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் இராணுவத் தலைமையகத்தில் 58 ஆவது இராணுவ நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அதில் பேசிய தளபதி சரத் பொன்செகோ, இனப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது என்று விடுதலைப் புலி பயங்கரவாதிகளை உணர வைப்பதற்காக பயங்கரவாதத்தை அழிக்கும் நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ளும்.
மாவிலாறு நடவடிக்கையிலிருந்து சிலாவத்துறை விடுவிக்கப்பட்டது வரை சிறிலங்கா இராணுவம் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றுள்ளது. எதிர்காலத்திலும் இராணுவம் தொடர்ந்து வெல்லும்.
எந்த ஒரு ஊழலையும் சகித்துக் கொள்ள முடியாது. இந்த இராணுவக் கட்டமைப்பின் கண்ணியம் காப்பாற்றப்பட வேண்டும் என்றார்.