Publish Date: Wed, 10 Oct 2007 (14:25 IST)
Updated Date: Wed, 10 Oct 2007 (14:25 IST)
சிறிலங்காவிற்கு வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையர் லூய்ஸ் ஆர்பரைச் சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தி வெலிக்கடைச் சிறையில் உள்ள 80 தமிழ்க் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சிறிலங்காவிற்கு வந்துள்ள லூய்ஸ் ஆர்பர், சிறிலங்காவின் சிறைகளை தற்போது பார்வையிட்டு வருகிறார்.
இந்நிலையில் வெலிக்கடைச் சிறைச் சிக்கல்கள் பற்றியும் எந்தவித விசாரணையும் இன்றி தாங்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளது பற்றியும் லூய்ஸ் ஆர்பரிடம் தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி 80 தமிழ்க் கைதிகள் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டம் குறித்து லூய்ஸ் ஆர்பரிடம் தெரிவிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் அவர்கள் கூறியுள்ளனர்.
Webdunia
Publish Date: Wed, 10 Oct 2007 (14:25 IST)
Updated Date: Wed, 10 Oct 2007 (14:25 IST)