Publish Date: Mon, 08 Oct 2007 (20:45 IST)
Updated Date: Mon, 08 Oct 2007 (20:44 IST)
பாகிஸ்தானின் எல்லை மாவட்டமான வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியினர் பகுதியில் தாலிபான் தீவிரவாதிகளுடன் அந்நாட்டு ராணுவம் நடத்திய கடும் சண்டையில் ராணுவ வீரர்கள் 20 பேரும், தாலிபான் தீவிரவாதிகள் 60 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்!
இத்தகவலை செய்தியாளர்களிடம் கூறிய பாகிஸ்தான் ராணுவப் பேச்சாளரும், துணைத் தளபதியுமான வாஹித் அர்ஷாத், இந்த மோதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் 50 பேர் ராணுவத்தினர் கொண்ட இரண்டு குழுக்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
வடக்கி வசிரிஸ்தானில் உள்ள மிராலி எனும் நகரின் தென் பகுதிக்குள் நுழைந்த ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் கடுமையாகத் தாக்கியதாக டான் செய்தி தொலைக்காட்சிக்கு கூறியுள்ள அர்ஷாத், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு அவர்களோடு அற்றுப் போனதாகவும் கூறியுள்ளார்.