செல்போன் தொடர்ந்து உபயோகித்தால் மூளையில் புற்று நோய் ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகளில் இருந்து உறுதியாக தெரிய வந்துள்ளது.
சுவிடனில் உரிஃப்ரோவில் உள்ள பல்கலைக் கழக மருத்துவமனையைச் சேர்ந்த பேராசிரியர் லின்னார்ட் ஹார்டெல் மற்றும் உமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கிஜில் ஹான்சன் மில்ட்
ஆகியோர் இணைந்து உலகத்தின் பல பகுதிகளிலும் பதினோரு ஆய்வை மேற்கொண்டனர்.
இவர்களின் ஆராய்ச்சியில் இருந்து பத்து வருடங்கள் செல்பேசியை அடிக்கடி பயன்படுத்துகின்றவர்களுக்கு மூளையில் புற்று நோய் வரக்கூடிய ஆபத்து இரு மடங்கு இருப்பதாக ஆராய்ச்சியில் இருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன் தினமும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் செல்பேசியை பயன்படுத்துபவர்களுக்கு, எந்த காதில் தொடர்ந்து செல்பேசியை வைத்து பேசுகின்றார்களோ, அந்த பகுதியில் மூளையில் கட்டி ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில் இருந்து, செல்பேசியை நீண்ட நேரத்திற்கு பயன்படுத்தினால் நரம்புகளை பாதுகாக்கும் மூளையில் உள்ள செல்கள் அழிந்து போவதால் மூளையில் புற்று நோய் வருவதற்கான ஆபத்து அதிகளவில் உள்ளது. அத்துடன் மூளையில் இருந்து காதை இணைக்கும் நரம்பில் கட்டி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த கட்டியால் காது கேட்டும் தன்மையை இழந்துவிடும் என்று ஆராய்ச்சியின் முடிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சுவீடனைச் சேர்ந்த இந்த ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில் இருந்து, பத்து வருடங்களுக்கு மேல் செல்பேசியை பயன்படுத்துபவர்களுக்கு, மற்றவர்களை விட 20 விழுக்காடு அதிகளவு காது கேட்கும் தன்மையை இழப்பதற்கும், 30 விழுக்காடு மூளையில் கட்டி ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கின்றது என தெரியவந்துள்ளது.
சிறு குழந்தைகள் செல்பேசி பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் சிறு குழந்தைகளுக்கு மண்டை ஓடு மிக மெலிதாக இருக்கும். நரம்பு மண்டலம் முழு அளவில் வளர்ச்சி பெற்று இருக்காது. இதனால் செல்போன் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு புற்றுநோய் வரும் ஆபத்து அதிகளவு இருக்கின்றது.
சர்வதேச அளவில் அனுமதிக்கப்பட்ட, மின்சாரம் மற்றும் மின்னணுவால் உண்டாகும் கதிர்வீச்சு அளவு பாதுகாப்பனதாக இல்லை. இதை மறுபரிசீலனை செய்து தற்காலத்திற்கு பொருந்தும் அளவிற்கு மாற்ற வேண்டும் என்று ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.
பெரியவர்களும் செல்போனில் பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சியின் முடிவுகள் கூறுகின்றன. இந்த ஆய்வு கட்டுரை டெய்லி மெயில் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.