Publish Date: Sun, 07 Oct 2007 (11:58 IST)
Updated Date: Sun, 07 Oct 2007 (11:58 IST)
இலங்கையின் தோன்ட்ரா கடற்கரைப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பலை இலங்கை ராணுவம் தாக்கி அழித்ததாக அறிவித்துள்ளது.
"தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதம் தாங்கிய கப்பலை இலங்கை கப்பற் படையினர் தாக்கி அழித்ததாகவும், மிகக் குறுகிய காலத்தில் விடுதலைப் புலிகளின் 10 ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும்" இலங்கை கப்பற் படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
புலிகளின் ஆயுதக் கப்பல் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என்றும், கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி புலிகளின் ஆயுதக் கப்பல் மீது தாக்குதல் நடத்தி 45 புலிகளைக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து கப்பற்படையினர் செய்தியாளர்கள் கூட்டம் ஒன்றையும் கூட்டியுள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகளிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை.
கடந்த ஓராண்டு காலமாக இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே பலத்த சண்டை நடந்து வருகிறது.