Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாக். அதிபர் தேர்தல் : முஷாரஃப் வெற்றி

பாக். அதிபர் தேர்தல் : முஷாரஃப் வெற்றி

Webdunia

, ஞாயிறு, 7 அக்டோபர் 2007 (11:22 IST)
ாகிஸ்தான் அதிபர் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று முஷஃப் வெற்றி பெற்றுள்ளார்.

எனினும், பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்கு பின்னரே அவரது வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

பாகிஸ்தானில் ராணுவ தளபதி பதவியை வகித்து வரும் முஷாரஃப், அதிபர் தேர்தலில் போட்டியிட கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், `அதிபர் தேர்தலை நடத்த எந்த தடையும் இல்லை. ஆனால் தேர்தலில் முஷாரஃப் போட்டியிட தகுதியானவரா என்பது குறித்து தீர்ப்பு அளிக்கும் வரை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும்' என்று நேற்று முன்தினம் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த விசாரணை வரும் 17-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தலின் வாக்கு பதிவு நேற்று திட்டமிட்டபடி நடந்தது. ஆனால் ுஷஃப் போட்டியிடுவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.

நேற்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. நாடாளுமன்றத்தின் இரு சபைகளை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், வட மேற்கு எல்லைப்புற மாகாணம் ஆகிய நான்கு மாகாண சட்டசபைகளை சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

வாக்கு பதிவு முடிந்த உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பதிவான 257 வாக்குகளில் முஷாரஃப்புக்கு 252 வாக்குகள் கிடைத்தன. வழக்கறிஞர்கள் சார்பாக போட்டியிட்ட நீதிபதி அகமதுவுக்கு 2 வாக்குகள் கிடைத்தன. மூன்று வாக்குகள் செல்லாதவை. இந்த தகவலை தலைமை தேர்தல் ஆணையர் முகமது பாரூகஅறிவித்தார்.

தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. வரும் 17-ந் தேதி உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்கு பின்னரே முஷாரஃபவெற்றி பெற்றது உறுதி செய்யப்படும்.

அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ராணுவ தளபதி பதவியை ராஜினாமா செய்வதாக முஷாரஃப் அறிவித்து உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil