Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ம‌த்‌திய ‌கிழ‌க்கு அமை‌தி மாநாடு : இ‌‌ந்‌தியாவையு‌ம் அழை‌க்க பால‌ஸ்‌‌தீன‌ம் வ‌லியுறு‌த்த‌ல்!

ம‌த்‌திய ‌கிழ‌க்கு அமை‌தி மாநாடு : இ‌‌ந்‌தியாவையு‌ம் அழை‌க்க பால‌ஸ்‌‌தீன‌ம் வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia

, சனி, 6 அக்டோபர் 2007 (19:16 IST)
பத‌ற்றமான சூழ‌லி‌ல் அடு‌த்த மாத‌ம் நடைபெறவு‌ள்ள ம‌த்‌திய ‌கிழ‌க்கு அமை‌தி மாநா‌ட்டி‌ற்கு ம‌ற்ற நாடுகளுட‌ன் இ‌ந்‌தியாவையு‌ம் அழை‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று பால‌ஸ்‌தீன அ‌திப‌ர் முகமது அ‌ப்பா‌ஸ் அமெ‌ரி‌க்காவை வ‌‌லியுறு‌த்‌தி உ‌ள்ளா‌ர்.

அமெ‌ரி‌க்கா‌வி‌ல் நடைபெறவு‌ள்ள ம‌த்‌திய ‌கிழ‌க்கு அமை‌தி மாநா‌ட்டி‌ற்கு இ‌ந்‌தியாவை அழை‌ப்பத‌ன் மூல‌ம் ‌ச‌ர்வதேச அள‌விலான ‌நியாய‌ம் ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்று அ‌ப்பா‌‌ஸ் கூ‌றினா‌ர்.

"இ‌ந்‌தியா எ‌ங்களு‌க்கு ஒரு மு‌க்‌கியமான நாடு, அத‌ன் ச‌ர்வதேச ‌நிலைபா‌ட்டை நா‌ங்க‌ள் வரவே‌ற்‌கிறோ‌ம்" எ‌ன்று முகமது அ‌ப்பா‌சி‌ன் ஊடக ஆலோசக‌ர் எ‌ட்வா‌ன் நே‌ர்காண‌ல் ஒ‌‌ன்‌றி‌ல் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ஸ்பெயி‌ன், ‌கி‌ரீ‌ஸ், ‌பிரே‌சி‌ல், தெ‌ன் ஆஃ‌ப்‌‌ரி‌க்கா, இ‌ந்‌தியா ஆ‌கிய நாடுகளை அழை‌க்க வே‌‌ண்டு‌ம் எ‌ன்று மாநா‌ட்டி‌ற்கு ஏ‌ற்பாடு செ‌ய்து‌ள்ள நாடுகளு‌ம் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன எ‌ன்று பால‌ஸ்‌தீன தகவ‌ல் அமை‌ச்சக‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இத‌ற்‌கிடை‌யி‌ல் அமை‌தி மாநா‌ட்டி‌ற்கு ஜி8 நாடுக‌ள், ஐ.நா. பாதுகா‌ப்பு அவை‌யி‌ன் ‌நிர‌ந்தர உறு‌ப்‌பின‌ர்க‌ள், அரபு‌க் குழு ம‌ற்று‌ம் கூடுதலாக 3 மு‌ஸ்‌லீ‌ம் நாடுக‌ள் ஆ‌கியோரை அழை‌க்க அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் ஜா‌ர்‌ஜ் பு‌‌ஷ் முடிவு செ‌ய்து‌ள்ளா‌ர்.

மு‌ன்னதாக மே‌ற்கா‌சியா‌வி‌ற்கான இ‌ந்‌தியா‌வி‌ன் ‌சிற‌ப்பு‌த் தூத‌‌ர் ‌சி‌ன்மயா கரேகா‌ன் கட‌ந்த மாத‌ம் பால‌ஸ்‌தீன‌ம் செ‌ன்‌றிரு‌ந்தபோது அ‌‌திப‌ர் முகமது அ‌ப்பாசை‌ச் ச‌ந்‌தி‌த்தா‌ர்.

அ‌ப்போது, இசுரேலுட‌ன் இ‌ந்‌தியா வை‌த்து‌ள்ள ந‌ட்பு அடி‌ப்படை‌யிலான உறவு அமை‌தியை ஏ‌ற்படு‌த்து‌ம் முய‌ற்‌சி‌க்கு‌ப் பெ‌ரிது‌ம் உதவு‌ம் எ‌ன்று அ‌ப்பா‌ஸ் கூ‌றி‌யிரு‌ந்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil