ஒசாமா பின்லேடன் உயிருடன் நலமாக உள்ளார் என்று கூறியுள்ள அல -கய்டா இயக்கத் தலைவர் முஸ்தஃபா அபு அல்-யாசித், உலகெங்கம் உள்ள முஸ்லீம்கள் ஆப்கானிஸ்தானின் விடுதலைக்காகப் போராட முன்வரவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த புதன்கிழமை இணையதளத்தில் வெளியிட்டுள்ள ஒலிச்செய்தியில் அல்-யாஷித் இவ்வாறு கூறியுள்ளதாக இஸ்லாமிய இணையதளங்களைக் கண்காணிக்கும் எஸ்ஐடிஇ புலனாய்வுக்குழு தெரிவித்துள்ளது.
"உலகின் ஒவ்வொரு மூலையிலும் வசிக்கும் முஸ்லீம்கள் ஆப்கானிஸ்தான் முஸ்லீம்கள் குறித்துக் கவலைப்பட வேண்டும். அவர்களுக்கு உதவ வேண்டும். தியாக உணர்வுகளை இதயத்தில் கொண்டுள்ள ஒவ்வொரு முஸ்லீமும் ஆப்கானிஸ்தானின் விடுதலைக்காக முன்வந்து போராட வேண்டும்" என்று அல்-யாஷித் கூறியுள்ளார்.
அரபு மொழியில் உள்ள அச்செய்தி 28 நிமிடங்கள் ஓடுகிறது. அப்போது அல்-யாஷித்தின் புகைப்படம் திரையில் விரிகிறது.
"நம்பிக்கை வெல்லும்" என்று தலைப்பிடப்பட்டுள்ள அச்செய்தியில், கடந்த மே மாதம் கொல்லப்பட்ட தலிபான் இராணுவத்தின் உயரதிகாரி முல்லா ததுல்லாபற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அல்-காய்டா இயக்கத்தின் தலைவர் பின் லேடன் எல்லா நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகிறார். அவர் உயிருடனும், நலத்துடனும் உள்ளார் என்று அல்-யாஷித் தெரிவித்துள்ளார்.