அமைதிதான் நமது முக்கிய நோக்கம், அது பாக்தாத்திலும், பெய்ரூட்டிலும், மட்டக்களப்பிலும் எட்டப்பட வேண்டும் என்று சிறிலங்காவிற்கான ஜெர்மன் தூதர் ஜூஜென் வீத் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனின் தேசிய நாளை முன்னிட்டு நடைபெற்ற விழா ஒன்றில் அவர் பேசியதாவது :
அமைதிக்கான நடவடிக்கைகள் தேவை. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நாம் ஒன்றை கற்றுள்ளோம். அன்றைய அரசியல் பலவீனம் தான் முதலாவது உலகப் போரை ஏற்படுத்தியது.
உலகில் 248 ஆயுதப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்த உலகில் 6 பில்லியன் மக்கள் வாழ்கின்றன. நமது பிரச்சினைகளின் பட்டியல் முடிவற்றது. நாம் உலகத்தின் வெப்பநிலை அதிகரிப்பையும் சந்தித்து வருகின்றோம். நோய்களும் நம்மை அச்சுறுத்தி வருகின்றன.
ஆனால் நமது முக்கிய இலட்சியம் அமைதியாகும். நாம் அதை பாக்தாத்திலோ, பெய்ரூட்டிலோ, மட்டக்களப்பிலோ அடைய வேண்டும். உலகத்திற்கு அமைதி தேவை. அல்லது நமது பொதுவான வாழ்க்கை ஆபத்தானதாகும். ஒன்றை மட்டும் மனதில் கொள்ள வேண்டும். நாம் இந்த உலகத்தின் விருந்தினர்கள். எனவே அதற்கேற்ப நாம் வாழவேண்டும் என்றார் அவர்.