நேபாளத்தில் திட்டமிட்டபடி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு அந்நாட்டு இடைக்கால அரசை இந்தியா, சீனா, அமெரிக்கா வலியுறுத்தியுள்ளன.
இது தொடர்பாக அந்நாடுகளின் தூதர்கள் சிவசங்கர் முகர்ஜி, செங் சியாங்லின், நான்சி பாவெல் ஆகியோர் நேபாளத்தின் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினர். அப்போது நவம்பர் 22ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ள தேர்தலைத் தள்ளிப்போடக் கூடாது என்று வலியுறுத்தினர்.
தேர்தலைத் தள்ளிப்போட்டால் சாதாரணமக்கள் ஏமாற்றமடைவார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
நேபாளத்தில் உள்ள மிகப்பெரிய கட்சிகளான நேபாளி காங்கிரஸ், சிபிஎன் -யுஎம்எல் போன்ற கட்சிகள் நடைபெறவுள்ள தேர்தலின் மூலம் தங்களின் செல்வாக்கில் மிகப்பெரிய மாற்றங்களைச் சந்திக்கும் என்று கருதப்படுகிறது.