மன்னார், வவுனியா மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கு அதிநவீன மறைவிடங்கள் இருக்கலாம் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகம் சந்தேகம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது 500 மீட்டர் நீளமுள்ள இரகசியக் குறியீடு கண்டுபிடிக்கப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
''வவுனியா -மன்னார் சாலையில் உள்ள குருமன்காடு பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையில் 500 மீட்டர் நீளமுள்ள இரகசியக் குறியீடு கண்டுபிடிக்கப்பட்டது. எனவே விடுதலைப் புலிகளிடம் செயற்கைக் கோள் உதவியுடன் இயங்கும் மறைவிடங்கள் இருக்கலாம் என்று நினைக்கிறோம்'' என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், வவுனியா, மன்னார் பகுதிகளில் நடைபெற்ற சண்டையில் குறைந்தது 5 விடுதலைப் புலிகள் இறந்திருக்கலாம் என்று தெரியவருவதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.
இதற்கு விடுதலைப் புலிகள் உடனடியாகப் பதில் அளிக்கவில்லை.