தெற்கு ஆப்கானிஸ்தானில் அன்று அதிகாலை அமெரிக்க இராணுவத்தினர் தலைமையிலான படைகள் நடத்திய தாக்குதலில் 20 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஹெல்மாண்ட் மாகாணத்தில் உள்ள ரீஜ் மாவட்டத்தில் தலிபான்களின் மறைவிடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக இராணுவத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
"இந்த நடவடிக்கையின்போது சிறிய வெடிகுண்டுகள் மற்றும் தானியங்கித் துப்பாக்கிகள் மூலம் தீவிரவாதிகள் திருப்பித் தாக்கினர். இராணுவம் நடத்திய எதிர்த் தாக்குதலில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதில் இராணுவம் மறைந்திருந்து தாக்கியதில் சில கட்டடங்கள் சேதமடைந்தன. பொது மக்கள் யாரும் காயமடைந்ததாகத் தெரியவில்லை. " என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஹெல்மாண்ட மகாணத்தில்தான் உலகிலேயே அதிக அளவில் ஓப்பியம் பயிரிடப்படும் பகுதியாகும். இப்பகுதி கடந்த சில மாதங்களாகத் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. தாக்குதலில் கடுமையாகப் பாதிக்கப்படும் பகுதியாக உருவாகி வருகிறது.