Publish Date: Sun, 30 Sep 2007 (16:10 IST)
Updated Date: Sun, 30 Sep 2007 (16:10 IST)
சேது சமுத்திர திட்டத்தால் கடலோர மற்றும் கடல் சார்ந்த வாழக்கைக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக இலங்கை கவலை தெரிவித்துள்ளது.
சேது சமுத்திர திட்டத்தால் இலங்கையின் கடற்பகுதியில் கடல் அலைகளின் வேகத்தில் மாற்றம் ஏற்படலாம் என்றும், அதனால் இலங்கையின் கடலோர மற்றும் கடல் சார்ந்த வாழ்க்கை பாதிக்கப்படலாம் என்றும் இலங்கை ஹைட்ராலிக் இன்ஸ்ட்யூட் தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் ஆய்வு நடத்தி, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும் இது தொடர்பாக இலங்கை அரசு இந்தியாவிடம் இதுவரை நேரடியாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.