மன்னார் பகுதியில் மக்கள் குடியிருப்புக்களை நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் ஏவுகணை வீச்சை தீவிரப்படுத்தியுள்ளனர். எனவே எஞ்சியுள்ள மக்களும் அப்பகுதிகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
ஏவுகணைத் தாக்குதல் கடந்த ஐந்து நாட்களாக சற்று ஓய்ந்திருந்தது. 25-ஆம் தேதியிலிருந்து மீண்டும் அதிகரித்திருப்பதாக முழங்காவில் பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
26,27-ஆம் தேதிகளில் மன்னாரைச் சேர்ந்த நெடுங்கண்டல், கன்னாட்டி, சின்னப்பண்டிவிரிச்சான், இத்திக்கண்டல், சாளம்பன் ஆகிய கிராமங்களில் இருந்து வெளியேறிய 29 குடும்பங்களைச் சேர்ந்த 103 பேர் முழங்காவைச் சென்றடைந்தனர்.
அவர்களுக்கு சமைப்பதற்கு மூன்று நாட்களுக்கு வேண்டிய உணவுப் பொருட்களும், தற்காலிகத் தங்குமிட வசதிகளையும் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் செய்துள்ளது.
மன்னார்ப் பகுதியில் இருந்து இதுவரை இடம்பெயர்ந்த 354 குடும்பங்களைச் சேர்ந்த 1299 பேர் முழங்காவில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை வழங்குவதில் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் ஈடுபட்டுள்ளது.